பீர் பாட்டிலில் தலையில் அடி... மது அருந்த அனுமதி கேட்ட அரசியல் கட்சி நிர்வாகி.!

பீர் பாட்டிலில் தலையில் அடி... மது அருந்த அனுமதி கேட்ட அரசியல் கட்சி நிர்வாகி.!


a-political-party-administrative-engage-in-a-brawl-with

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இயங்கி வரும்  டாபா ஹோட்டலில் பிரச்சனை செய்து  அதன் உரிமையாளரை பீர் பாட்டிலால் தாக்கி விட்டு  தலைவரை வாங்கி இருக்கும் பாமக நிர்வாகியை காவல்துறை தீவிரமாக வலை வீசி தேடி வருகிறது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோனேரி வளவு பகுதியில் தாபா ஹோட்டல் நடத்தி வருபவர் சந்திரசேகர். இவரது ஹோட்டலுக்கு தாரமங்கலம் பகுதியைச் சார்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நகரச் செயலாளர் சக்தி என்பவர் உணவருந்திருக்கிறார். தனது நண்பர்களுடன் வந்த அவர் மது அருந்த வேண்டும் என்று கூறியுள்ளார். ஹோட்டலில் மது அருந்து அனுமதி இல்லை என சந்திரசேகர் மறுத்திருக்கிறார். இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.

Salem

இதனைத் தொடர்ந்து ஹோட்டலில் இருந்து வெளியேறிய சக்தி மீண்டும் தனது சகோதரர்களுடன் வந்து ஹோட்டல் உரிமையாளர் சந்திரசேகரிடம் பிரச்சனை செய்துள்ளார். அப்போது கைகலப்பாகி சக்தி மற்றும் அவரது சகோதரர்கள் பீர் பாட்டிலால்  சந்திரசேகரின் தலையில் பலமாக தாக்கி இருக்கின்றனர். வலி தாங்காமல் அலறிய அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரவே சக்தி மற்றும் அவரது சகோதரர்கள் தப்பி ஓடி விட்டனர்.

பின்னர் அங்கிருந்தவர்கள் சந்திரசேகரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் தலைமறைவாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நகரச் செயலாளர் சக்தியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்‌. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.