பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு தோட்டத்திற்கு சென்ற பிளஸ் ஒன் மாணவி... கிணற்றில் மிதந்த பரிதாபம்...!!



a-plus-one-student-went-to-the-garden-to-water-the-crop

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொங்கரப்பட்டியில், தாய் தந்தை இறந்து விட்டதால் சத்யா என்ற 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தனது பாட்டியுடன் வசித்து வந்தார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவிட்டு வருவதாக கூறி தோட்டத்திற்கு சென்ற சத்யா வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சத்யாவின் பாட்டி தனது அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சத்யாவின் உடல் விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் மிதந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சத்யாவின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். 

காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில் சத்யா கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்தது.