நள்ளிரவில் வீடு திரும்பிய தி.மு.க பிரமுகரை வெட்டி சாய்த்த மர்ம கும்பல்..!A mysterious gang beheaded a DMK figure who returned home at midnight

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்.   இவர் தி.மு.க-வில் பொறுப்பாளராக உள்ளார். தனது வேலைகளை முடித்துக்கொண்ட மோகன் நேற்று இரவு 10 மணியளவில் தனது வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.  அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் மூவர் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் அவரது முகம் மற்றும் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டது.

தாக்குதலில் நிலை குலைந்த மோகன்  ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதன் பின்னர் மர்ம நபர்கள் 3 பேரும் தப்பி ஒடியுள்ளனர். ரோட்டில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மோகணை பார்த்த, அந்த வழியாக சென்ற பொதுமக்கள் திருத்தணி காவல் நிலையத்திற்கு  தகவல் அளித்துள்ளனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மோகன் உடலை  மீண்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருத்தணி  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.