BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
#ViralVideo: டிராபிக் ஜாமில் ஜாலியாக சரக்கடிக்கும் குடிகாரர்.. நடுரோட்டில் குடிமகன் சம்பவம்..!
மதுபானம் உடல் நலனிற்கும், குடும்ப நலனிற்கும் எதிரானது என்று எத்துணை விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும், மதுவினால் மதியிலப்போரின் எண்ணிக்கை குறையவில்லை. அதனால் ஏற்படும் குற்றமும், கொலைகளும் கூடிக்கொண்டுதான் செல்கிறது.
இந்நிலையில், சாலையில் இருக்கும் போக்குவரத்து நெரிசலை உபயோகம் செய்துகொண்ட குடிகாரர், வாகனத்தில் தான் பதுக்கி வைத்த மதுபானத்தை தண்ணீருடன் சேர்ந்து கலந்து அருந்துகிறார்.
இந்த விஷயம் குறித்த காணொளியை அந்த வாகனத்திற்கு பின்னால் பயணம் செய்த வாகன ஓட்டி தனது செல்போனில் பதிவு செய்து இருக்கிறார். குடிகாரர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வீடியோ வைரலாகி வருகிறது. வாகனத்தின் பதிவு எண்ணில் TN 32 BC 4541 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.