கொலையில் முடிந்த நிலத் தகராறு... மாறி மாறி வெட்டிக் கொன்ற சம்பவம்.. போலீஸ் விசாரணை..!

கொலையில் முடிந்த நிலத் தகராறு... மாறி மாறி வெட்டிக் கொன்ற சம்பவம்.. போலீஸ் விசாரணை..!


A land dispute that ended in murder... The incident of killing by turns.. Police investigation..!

தென்காசியில் நிலப்பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் இரண்டு பேர் கொலையான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஐயப்பன் மற்றும் செல்லதுரை.

இவர்கள் இருவருக்கும் நில பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் நில பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கி கொண்டதாக சொல்லப்படுகிறது.

Land Dispute

இதனையடுத்து ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த செல்லதுரை ஐயப்பன் என்பவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஐயப்பன் உயிரிழந்தார். இந்நிலையில் தனது தந்தை ஐயப்பன் உயிரிழந்ததைக் கேட்டு ஆத்திரமடைந்த அவரது மகன் கருப்புசாமி தனது தந்தையின் இறப்பிற்கு பழி வாங்குவதற்காக செல்லதுரையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ஐயப்பனின் மகன் கருப்புசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.