கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
குடும்ப தகராறில் மனைவியை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்ட கொடூர கணவன்.. அதிர்ச்சி சம்பவம்..!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மேட்டுத் தெருவில் மகேந்திரன் மனைவி கலைசெல்வியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் மின் வாரியத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக மகேந்திரன் மற்றும் கலைசெல்வி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட போது கோபத்தில் மனைவி கலைச்செல்வியை மாடியில் இருந்து மகேந்திரன் கீழே தள்ளிவிட்டுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த கலைசெல்வியை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மகேந்திரனைக் கைது செய்தனா். மேலும் குடும்பத்த தகராறில் மனைவியை மாடியில் இருந்து கணவன் தள்ளிவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.