ஐகோர்ட் உத்தரவு; ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவுகளை வெளியேற்ற, அனுமதி கோரி தாக்கல் செய்த மனு ஒத்துவைப்பு..!

ஐகோர்ட் உத்தரவு; ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவுகளை வெளியேற்ற, அனுமதி கோரி தாக்கல் செய்த மனு ஒத்துவைப்பு..!


A court order; The petition filed for permission to discharge Sterlite company's waste is approved..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் மேனேஜர் தாக்கல் செய்த மனு என்று விசாரணைக்கு வந்தது.

தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேனேஜர் சுமதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. 

மேலும், வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளையும் மூலப் பொருள்களையும் வெளியேற்ற அனுமதிக்கோரி மனு அளித்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கின் மீதான அடுத்த கட்ட விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.

இந்நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் கூடியதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து தர்ணாவில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.