பாசமலர் 2.0: தங்கைக்கு குழந்தை பாக்கியம் வேண்டி பூமிக்கு அடியில் விரதம் இருக்கும் அண்ணன்..!

பாசமலர் 2.0: தங்கைக்கு குழந்தை பாக்கியம் வேண்டி பூமிக்கு அடியில் விரதம் இருக்கும் அண்ணன்..!


A brother fasts under the earth to pray for the blessing of a child for his younger sister

திருநெல்வேலி மாவட்டம், இட்டமொழி அருகேயுள்ள சங்கனாங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராமையா. இவரது மகன் சந்திரன் (46). இவர் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள உழவர் சந்தை அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். மேலும் இவர் தற்போது குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டுள்ளார்.

அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக தனது சொந்த ஊரான சங்கனாங்குளம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் 6 அடி பள்ளம் தோண்டி, அதனுள் இறங்கி 21 நாட்கள் விரதத்தை தொடங்கியுள்ளார். இது குறித்து  சந்திரன் கூறுகையில், தனக்கு 9 வருடங்களுக்கு முன்பு தொண்டையில் கேன்சர் வியாதி இருந்ததாகவும். பல்வேறு சிகிச்சை அளித்தும் நோய் குணமடையவில்லை. மருத்துவர்கள் தனது உயிருக்கு 21 நாள் கெடு விதித்தனர் என்று கூறினார்.

மேலும், அப்போது குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டு கடலில் நீராடிய பின்பு நோய் குணமானதாக கூறியுள்ளார். இதன் பின்னர் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக தனது ஊரில் உள்ள சுடுகாட்டில் காளியம்மன் உள்ள பகுதியில் பூமிக்கு அடியில் குழி தோண்டி உணவருந்தாமல் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் இருந்ததாகவும். இந்த ஆண்டு தனது தங்கைக்கு குழந்தை வரம் வேண்டி இந்த 21 நாள் விரதத்தை தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார்.