வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
ஆண்டு விழா முடிந்ததும் கதறிய பச்சிளம் பிஞ்சு.. பள்ளி வளாகத்தில் தூய்மை பணியாளரால் நடந்த பயங்கரம்..! பதறிப்போன தாய்..!
ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக தூய்மைப் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியில் 9 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள தொடக்கப்பள்ளியில் 5ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில், நேற்று பள்ளியில் நடந்த ஆண்டுவிழா நிகழ்ச்சி முடிந்ததும் மகளை அழைத்து வர அவரது தாய் சென்றுள்ளார்.
அப்போது மகள் அழுது கொண்டே இருந்துள்ளார். இதுகுறித்து அவர் விசாரித்த போது, அதே பள்ளியில் தூய்மை பணியாளராக வேலை செய்யும் சாமுவேல் (வயது 68) சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனைக் கேட்டு கோபமுற்ற தாய் நேற்று முன்தினம் பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்ற பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அம்பிகா விசாரணை நடத்தியுள்ளார். அப்போது தூய்மைப் பணியாளர் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதும், சிறுமி அவரிடமிருந்து தப்பித்து ஓடி வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தூய்மைப் பணியாளர் சாமுவேல் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்த காவல்துறையினர், அவரை கைது செய்துள்ளனர்.