காலையில் பள்ளி !! மாலையில் இப்படியொரு தொழிலா? வியக்கவைக்கும் 9ம் வகுப்பு மாணவன்!!

காலையில் பள்ளி !! மாலையில் இப்படியொரு தொழிலா? வியக்கவைக்கும் 9ம் வகுப்பு மாணவன்!!



9-standard-student-make-business

திருப்பூர் காங்கேயம் பகுதியில் வசித்து வருபவர் நாச்சிமுத்து. இவரது மனைவி ஜெயலெட்சுமி, இவர்களது  பொன் வெங்கடாஜலபதி என்ற மகன் உள்ளார். 14 வயது நிறைந்த இவர் தற்போது 9ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் அவர் கோழிப்பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் பகலில் பள்ளிக்கு சென்று படித்துவிட்டு வரும் வெங்கடாஜலபதி , மாலை வீடு திரும்பி தனது பண்ணையை கவனித்து கொள்கிறார். ஆரம்பத்தில் வெறும் 10 கோழிக்குஞ்சுகளை மட்டுமே வைத்து தனது தொழிலை தொடங்கிய அவர் இன்று 150 கோழிகளுக்கு மேல் வளர்த்து வருகிறார். மேலும் அவர் இந்த வயதிலேயே படித்துக்கொண்டு, கடந்தாண்டு மட்டும் ஒரு லட்ச ரூபாயை சம்பாதித்துள்ளார்.

vengatajalapathi

இதுகுறித்து வெங்கடாஜலபதி கூறுகையில், எனது தாத்தா விவசாயம் செய்து கொண்டே கோழிப்பண்ணை ஒன்றை வைத்திருந்தார். அவர் கோழிகளை பராமரிப்பது, வளர்ப்பது எனக்கு மிகவும் பிடித்தது. நானும் அவரைப் போலவே கோழிப்பண்ணை வைக்க எண்ணி எனது பெற்றோரிடம் கூறினேன். அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர்.

 அதனைத்தொடர்ந்து காலையில் பள்ளிக்கு சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பியதும் எனது கோழிப்பண்ணையை கவனித்து வருகின்றேன்.மேலும் கோழிகள் குறித்து அவ்வப்போது எனக்கு எழும் சந்தேகங்களை எனது அப்பா, தாத்தாவிடமும், யூடியூப்  மூலமும் பார்த்து சரி செய்வேன். மேலும் ஆட்டுக்குட்டியும் 2 வாத்தும் வளர்த்து வருகிறேன் என கூறியுள்ளார் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது