7 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமையாசிரியர் போக்ஸோவில் கைது.!

7 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமையாசிரியர் போக்ஸோவில் கைது.!


7th-standard-girl-harassed-by-headmaster

ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக, தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகாமையில் கெம்பகரை கிராமத்தில் அரசுப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு தலைமையாசிரியராக தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த லாரன்ஸ் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், இவர் சிறுமி என கூட பாராமல், ஏழாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மனஉளைச்சல் அடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த பெற்றோர் தனது உறவினர்களுடன் சென்று தலைமை ஆசிரியருக்கு தர்மஅடி கொடுத்துள்ளனர்.

Krishnagiri

மேலும், அவருடைய கார் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி, அதே வேகத்தில் சென்று காவல்துறையினரிடமும் புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் பள்ளிக்கு வருவதற்கு முன்பே லாரன்ஸ் அங்கிருந்து தனது காரில் தேன்கனிகோட்டைக்கு தப்பி சென்றுள்ளார். 

இதனையடுத்து மாணவியிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தலைமையாசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததை உறுதி செய்து அவரை தேன்கனிக்கோட்டைக்கு சென்று கைது செய்துள்ளனர்.