BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 70 வயது முதியவர் கைது.!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்தவர் 70 வயதான முதியவர் வேலாயுதம். இவர் அதே பகுதியில் தனது சகோதரர்களுடன் சேர்ந்து கயிறு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்து வந்துள்ளனர்.

இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுமியும் அங்கு தனது குடும்பத்தினரும் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
அங்கே சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து மன்னார்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் வேலாயுதம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக போக்சோ சட்டத்தின் கீழ் வேலாயுதத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆசைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.