ஆம்புலன்ஸ் வர மறுத்ததால், நெஞ்சு வலியால் துடிதுடித்த தந்தைக்காக 7 வயது மகன் செய்த காரியம்.! நெஞ்சை உலுக்கும் வீடியோ!!

ஆம்புலன்ஸ் வர மறுத்ததால், நெஞ்சு வலியால் துடிதுடித்த தந்தைக்காக 7 வயது மகன் செய்த காரியம்.! நெஞ்சை உலுக்கும் வீடியோ!!



7-year-son-take-resk-to-admit-his-father-in-hospital

ஆம்புலன்ஸ் வர மறுத்ததால் நெஞ்சு வலியில் துடிதுடித்த தனது தந்தையை, தள்ளுவண்டியில் படுக்க வைத்து ஏழு வயது சிறுவன், அம்மாவுடன் சேர்ந்து தள்ளி சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சிங்ரவுலி, பைலாரி பகுதியில் 48 வயது நிறைந்த ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஏழு வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

அதனால் பதறிபோன அவரது மனைவி அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ்க்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர்கள் பணம் கேட்டதாகவும், ரமேஷ் குமாரின் மனைவி பணம் இல்லை என கூறிய நிலையில் ஆம்புலன்ஸ் ஒட்டுனர் வர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரமேஷ் குமாரின் மனைவி தனது 7 வயது மகனுடன் சேர்ந்து கணவரை அருகில் இருந்த தள்ளுவண்டியில் படுக்க வைத்து 5 கிலோ மீட்டர் தூரம் தள்ளி சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு குற்றம் இதைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.