பெங்களுருவில் இருந்து சேலம் நோக்கி விரைந்த சொகுசு கார்... சோதனை செய்த போலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி....

பெங்களுருவில் இருந்து சேலம் நோக்கி விரைந்த சொகுசு கார்... சோதனை செய்த போலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி....


680-kg-gutka-smuggled-in-a-luxury-car-seized-in-hosur

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோ காவல் நிலைய போலீசார், நேற்று முன்தினம் பேத்தலப்பள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களுருவில் இருந்து சேலம் நோக்கி சென்ற சொகுசு காரை மறித்து சோதனையிட்டனர். 

அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, மதுபான பாட்டில்கள் உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர் போலீசார். அதனையடுத்து சுமார் 680 கிலோ அளவிலான குட்கா, மதுப்பான பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை அட்கோ போலீசார் பறிமுதல் செய்தனர்.

680 kg gutka

மேலும் கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரவிகுமார்(22), சுரேஷ்குமார் (26) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் பெங்களுருவில் இருந்து சேலத்திற்கு குட்கா மற்றும் மதுபான பாட்டில்களை கடத்தியது தெரிய வந்தது. அதனையடுத்து போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.