ஷூ போடாமல் பள்ளிக்கு வந்ததால் 6 ஆம் வகுப்பு மாணவனை கடுமையாக தாக்கிய பள்ளி நிர்வாகி... என்ன நடந்தது.?

ஷூ போடாமல் பள்ளிக்கு வந்ததால் 6 ஆம் வகுப்பு மாணவனை கடுமையாக தாக்கிய பள்ளி நிர்வாகி... என்ன நடந்தது.?



6 th student went to school not wearing shoe then school staff gave severe punishment

மதுரை மாவட்டம் கே.புதூர் அல் அமீன் நகரை சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான். இவரது மகன் பஹியா ஜன்னா அதே பகுதியில் உள்ள பப்ளிக் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் தற்போது மழை காலம் என்பதால் பள்ளிக்கு ஷூ போடாமல் செருப்பு அணிந்து சென்றுள்ளான். 

இதனை அப்பள்ளியில் உள்ள ஆசிரியர்களே கண்டு கொள்ளாத நிலையில் அப்பள்ளியில் அலுவலக நிர்வாக பொறுப்பாளரான ஷகீத் என்பவர் ஏன் ஷூ அணிந்து வரவில்லை என கேட்டு மாணவனின் கன்னத்தில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் காயமடைந்த மாணவனை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். 

School staff

பின்னர் இச்சம்பவம் குறித்து பள்ளி முதல்வரிடம் புகார் கொடுத்துள்ளனர் மாணவனின் பெற்றோர். ஆனால் பள்ளி நிர்வாகம் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் நீங்கள் எங்கே வேண்டுமானாலும் செல்லுங்க, எங்களை ஒன்றும் செய்ய முடியாது, முடிந்ததை பாருங்க என ஆணவத்துடன் ஷகீத் பதிலளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.