தமிழகம்

பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி பெண் செய்த செயல்! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்.!

Summary:

பிரசவ நேரத்தில் வலி அதிகமாக இருக்குமோ என்று எண்ணி 5 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் நாகராஜ். இவர் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கும் சுஷ்மிதா என்ற பெண்ணிற்கும் திருமணம் நடந்து, சுஷ்மிதா தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கர்ப்பமான சமயத்தில் இருந்தே சுஷ்மிதாவுக்கு வயிற்று வலி அடிக்கடி இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

தனக்கு ஏற்படும் வயிற்று வலி குறித்து வீட்டில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார் சுஷ்மிதா, ஆனால் வீட்டில் உள்ளவர்களும் இந்த மாதிரி நேரததில் அப்படித்தான் இருக்கும், என ஆறுதல் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் பிரசவ வலியை நினைத்து பயந்த சுஷ்மிதா, அவரது அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார்.

அம்மா வீட்டிற்கு சென்ற சுஷ்மிதா அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைந்து திடீரென தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டுள்ளார். உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததில் வலி தாங்காமல் சுஷ்மிதா கதறி அலறல் அசுத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்திர், அக்கம்பக்கத்திர் உதவியுடன் சுஷ்மிதாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுஷ்மிதா உயிரிழந்தார்.


Advertisement