கோவை கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி... விபத்து...!!

நேற்று, கோவையில் உள்ள தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து கட்டுமான தொழிலாளர்கள் 4 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் 5 பைன் உயிரிழந்துள்ளனர்.
கல்லூரியில் ஏற்கனவே இருந்த பக்கவாட்டு சுவரை ஒட்டி புதிதாக பத்து அடி உயரம் கொண்ட பக்கவாட்டு சுவர் கட்டும் வேலை நடந்து வருகிறது. நேற்று கட்டுமான வேலை நடந்து கொண்டிருந்த போது, பழைய சுவர் திடீரென வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது இடிந்து விழுந்துள்ளது. இதில் கட்டுமான வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர்.
இந்த விபத்தில் இறந்தவர்களில் 3 பேர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்கள், ஒருவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இறந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், இந்த விபத்து தொடர்பாக ஒப்பந்ததாரர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.