தமிழகம்

கண்கலங்க வைக்கும் சம்பவம்..! 4 வயது மகனை இழந்து துடிக்கும் பெற்றோர்..! மின்விசிறி சுவிட்சை தொட்டதால் நேர்ந்த விபரீதம்.

மின்விசிறி சுவிட்சை தொட்ட சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளைமேடு ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடை நடத்திவருகிறார். இவருக்கு 4 வயதில் தருனேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த தருனேஸ்வரன் அருகில் இருந்த மின்விசிறி சுவிட்சை தொட்டுள்ளான்.

அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தருனேஸ்வரன் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனை பார்த்து பதறிப்போன பெற்றோர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளனர். மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டு குழந்தையின் பெற்றோர் கதறி அழுத காட்சிகள் அங்கிருந்த அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. தற்போது சிறுவனின் உடல் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.


Advertisement