தமிழகம் விளையாட்டு

இந்த சின்ன வயசுல நீ வேற லெவல்மா... 4 வயது தூத்துக்குடி சிறுமி உலக சாதனை.! குவிந்துவரும் பாராட்டுக்கள்.!

Summary:

தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியை சேர்ந்தவர் தேவசகாயம். இவரது 4 வயது மகள் லின்சியா ஆராதன

தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியை சேர்ந்தவர் தேவசகாயம். இவரது 4 வயது மகள் லின்சியா ஆராதனா. லின்சியா தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். மிகவும் துடிப்பாக இருக்கும் இந்த சிறுமிக்கு பயிற்சியாளர் லட்சுமணன் என்பவர் ஓட்ட பயிற்சி கொடுத்துள்ளார்.

இதனையடுத்து நீண்ட தூர ஓட்டத்துக்கு தயாரானார் சிறுமி லின்சியா ஆராதனா. இந்தநிலையில், சிறுமி லின்சியா ஆராதனா நோபல் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக ஆறு கிலோமீட்டர் 100 மீட்டர் தூரத்தை ஒரு மணி நேரம் 4 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார்.

சிறுமி லின்சியா ஆராதனாவுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறுமியின் சாதனையை பாராட்டினர். உலக சாதனை படைத்த சிறுமிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Advertisement