“அசுரன்” கதையின் முதல் சாய்ஸ் கருணாஸா? – வெற்றிமாறன் சொன்ன அந்தக் கதை!
போர்வெல் அமைக்கும் பணியில் சோகம்.. மின்சாரம் பாய்ந்து பறிபோன 4 உயிர்கள்.. கண்ணீர் துயரம்.!
இரும்பு கம்பி மின்கம்பியில் உரசியதால் ஆழ்துளை கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளிகள் உயிரிழந்த சோகம் மாமல்லபுரத்தில் நடந்துள்ளது.
போர்வெல் பணிகள்:
Mamallapuram Electric Shock Death: சென்னையில் உள்ள மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் தனியார் குடியிருப்பு விடுதி உள்ளது. இந்த விடுதியின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு தோண்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணியில் கல்பாக்கம், நெய்க்குப்பி பகுதியைச் சேர்ந்த பிளம்பிங் தொழிலாளர்கள் பிரபு (வயது 22), பாட்ஸா (வயது 45), வெங்கடேசன் (வயது 33),ராஜேந்திரன் (வயது 55), பகவான் (வயது 33) ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர்.
இதையும் படிங்க: பனை நுங்கில் பாய்ந்த மின்சாரம்.. கல்லூரி மாணவர்கள் துள்ளத்துடிக்க பலியான சோகம்..!
4 பேர் பலி:
அப்போது, சுமார் 30 அடி ஆழம் ஆழ்துளை கிணறு தோண்டும் பணிகள் முடிந்ததும் இரும்பு பைப்பை பிளம்பிங் தொழிலாளர்கள் மேலே எடுத்தனர். பகவான் என்பவர் குச்சியை எடுக்கச் சென்றுள்ளார். அச்சமயம், இரும்பு பைப் எதிர்பாராத விதமாக உயரழுத்த மின்சார கம்பியில் உரசி இருக்கிறது. இந்த சம்பவத்தில் 4 தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதிகாரிகள் விசாரணை:
தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் உயிரிழந்த நால்வரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: தாத்தா, பேரன், பேத்தியின் உயிரைப்பறித்த கோர விபத்து.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்.!