தமிழகம் Covid-19

தமிழக முதலமைச்சர் அலுவகத்தில் 4 பேருக்கு கொரோனா.!

Summary:

4 person affected by corona in cm office

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக பரவி வருகிறது. இந்தநிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அலுவலகத்தில் பணியாற்றும் 4 பணியாளர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்திலே சென்னையில் தான் கொரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது. அதனை தடுக்கும் விதமாக நாளை முதல் முழு ஊரடங்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடைமுறைக்கு வர உள்ளது.

சமீபத்தில், தலைமைச் செயலக முதலமைச்சர் அலுவலகப் பிரிவு முதுநிலை தனிச் செயலாளர் தாமோதரன் கொரோனா பாதிக்கப்பட்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் முதல்வர் அலுவலக துணை செயலாளர், 2 அலுவலக உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் நான்கு பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement