தமிழகம்

4 மாத பெண் குழந்தையை காணவில்லை! வீடு முழுவதும் தேடிய தாய் கண்ட அதிர்ச்சி காட்சி! பகீர் சம்பவம்!

Summary:

4 month baby dead by drowned in water tank

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, கல்லாவி அருகே உள்ள அம்மன்கோவில்பதி என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் வேடியப்பன். 30 வயது நிறைந்த இவர் லாரி டிரைவராக உள்ளார். இவரது மனைவி ஷோபனா. இவர்களுக்கு 2 வயதில் சுதர்சன் என்ற  மகனும்,  4 மாதத்தில் தேவதர்ஷினி என்ற பெண் குழந்தையும்  உள்ளது. 

இந்த நிலையில் நேற்று வேடியப்பன் வெளியே சென்ற நிலையில், ஷோபனா வீட்டில் சமையல் செய்துகொண்டு இருந்துள்ளார். பின்னர்  வேலையை முடித்துவிட்டு வந்து பார்த்தபோது குழந்தை தேவதர்ஷினியை  காணவில்லை. இந்நிலையில் பதறிப்போன ஷோபனா குழந்தையை வீடுமுழுவதும் தேடியுள்ளார். அப்போது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தை மூழ்கிய நிலையில் கிடந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஷோபனா கதறி துடித்துள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அது  ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் குழந்தையின் தந்தை, தாய் மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் 4 மாத பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 


Advertisement