தமிழகம்

பேரறிவாளன் வெளியே வருகிறார்.! அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று பரோல் வழங்கிய உயர் நீதிமன்றம்!

Summary:

30 days barole for perarivalan

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் கைதியாக இருக்கும் பேரறிவாளன், கடந்த 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அவருக்கு 90 நாள் பரோல் கேட்டு அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

அந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது,  பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கேட்டு அற்புதம்மாள் அனுப்பிய மனு  நிராகரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக சிறைத்துறை விளக்கம் அளித்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அற்புதம்மாள் தாக்கல் செய்த மனுவில், ‘எனது மகன் பேரறிவாளன் தற்போது புழல் சிறையில் இருந்து வருகிறாா். அந்த சிறையில் பல கைதிகள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். பேரறிவாளனுக்கு பல்வேறு உடல்நல கோளாறு உள்ளதால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்தநிலையில், 90 நாள்கள் விடுப்பு கேட்ட அற்புதம்மாளின் வழக்கில், பேரறிவாளனுக்கு 30 நாள்கள் விடுப்பு வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அற்புதம்மாளின் மனுவை தமிழக அரசும் சிறைத் துறையும் நிராகரித்துவிட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் 30 நாள்கள் விடுப்பு வழங்கியுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெற்ற ஒரு வாரத்தில் பேரறிவாளனை பரோலில் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Advertisement