பிச்சைக்காரர்களை மட்டுமே குறிவைத்து கொள்ளையடிக்கும் மர்ம நபர்கள்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!

பிச்சைக்காரர்களை மட்டுமே குறிவைத்து கொள்ளையடிக்கும் மர்ம நபர்கள்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!


3 persons robbery form begging peoples

சென்னையில் பிளாட்பாரங்களில் படுத்து தூங்கும் பிச்சைக்காரர்களை அடித்து துன்புறுத்தி அவர்கள் வைத்திருக்கும் பணத்தை கொள்ளை அடித்து ஒரு கொள்ளை கும்பல் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.  பாதிக்கப்படும் பிச்சைக்காரர்களும் இது குறித்து புகார் வழங்காமல் இருக்கும் நிலையில், கொள்ளை அடிக்கும் சம்பவம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.

சென்னையில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் தங்கியிருந்து, பிச்சையெடுத்து பிழைத்து வந்த பெண்மணி கண்ணம்மாள் மற்றும் இவருடன் பிச்சை எடுத்து வந்த சங்கரன் என்ற முதியவரையும் கடந்த 18 ஆம் தேதியன்று மர்ம கும்பல் தாக்கி, அவர்களிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதில் கண்ணம்மாளும், சங்கரனும் காயம் அடைந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

begging people

இது தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிச்சைக்காரர்கள் இருவரும் தாக்கப்பட்ட சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. சிசிடிவி பதிவுகளை வைத்து மேற்கொண்ட விசாரணையில், ராயப்பேட்டை பகுதியை சார்ந்த சுலைமான், தனபால், சக்திவேல் ஆகிய மூவரை கைது செய்து விசாரித்துள்ளனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர்கள் இரவு நேரத்தில் கஞ்சா போதையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொள்ளையடித்து வந்துள்ளனர். இவர்கள் பிச்சைக்காரர்களை குறி வைத்து கொள்ளை தொழிலை நடத்தி வந்துள்ளனர். ஒரு நாள் வேட்டையில் 3 பேரிடம் கொள்ளை அடித்தால் போதும், ரூ.10 ஆயிரம் கிடைத்து விடும். கொள்ளையடித்த தொகையை செலவு செய்த பிறகு மீண்டும் கொள்ளையடிப்போம் என்று இவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.