ப்ரிட்ஜ் வெடித்ததால் விபரீதம்: 2 பெண்கள் உட்பட 3 பேர் தீயில் கருகி பலி..!

ப்ரிட்ஜ் வெடித்ததால் விபரீதம்: 2 பெண்கள் உட்பட 3 பேர் தீயில் கருகி பலி..!


3 people in the house tragically died when the fridge in the house suddenly exploded in Chennai

சென்னையில் வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜ் திடீரென வெடித்ததில் வீட்டில் இருந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் கோதண்டராமன் நகரில் வசித்து வரும் கிரிஜா என்பவர் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டதால் வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜ் திடீரென வெடித்து சிதறியது. எதிர்பாராத இந்த விபத்தில் வீட்டில் இருந்த கிரிஜா, அவரது தங்கை ராதா மற்றும் உறவினர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த விபத்து குறித்து அந்த பகுதியில் உள்ள மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிறகு உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விபத்து எவ்வாறு ஏற்பட்டது என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.