காய்ச்சல் பயத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை.. சென்னையில் சோகம்.!

காய்ச்சல் பயத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை.. சென்னையில் சோகம்.!


3-members-of-the-same-family-have-committed-suicide-due-to-fear-of-fever-near-chennai

சென்னையில் தொடர் காய்ச்சல் காரணமாக ஏற்பட்ட பயத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் 74 வயதான டில்லி, அவரது மனைவி மல்லிகேஸ்வரி அவர்களது மகள் நாகேஸ்வரி. மூவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து தனது வீட்டிற்கு அருகில் இருந்த மெடிக்கல் ஷாப்பில் காய்ச்சலுக்கான மாத்திரையை வாங்கி சாப்பிட்டுள்ளனர். 

chennai

இருப்பினும் காய்ச்சல் குறையாததால் மன உளைச்சலுக்கு ஆளான மூவரும் தனிதனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்போது 3 பேரின் சடலத்தை மீட்டுள்ள திருமுல்லைவாயில் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.