இளைஞனின் அதிவேகத்தில் அப்பாவிகள் 2 பேர் பலி... 3 இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பெரும் விபத்து..!

இளைஞனின் அதிவேகத்தில் அப்பாவிகள் 2 பேர் பலி... 3 இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பெரும் விபத்து..!


3 bikes hitting 2 men's dead

மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், இரண்டு பேர் பரிதாபமாக பலியான நிலையில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் மேட்டுப்பட்டி அருகே உள்ள பூசாரி கவுண்டர் வலசை பகுதியைச் சார்ந்தவர் பிரவீன். இவர் தனது உறவினரான பெண் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில், எதிரே தவறான திசையில் அதிவேகத்துடன் வந்த ஜெகன் என்பவர், பிரவீனின் வாகனத்தில் மோதியுள்ளார். 

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த செந்தில் என்பவர் மீது மோதி விழுந்தனர். இந்த சம்பவத்தில் பிரவீன் மற்றும் அவருடன் வந்த பெண்மணி நிகழ்வு இடத்திலேயே பரிதாபமாக பலியான நிலையில், ஜெகன் மற்றும் செந்தில் ஆகிய இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். 

accident

இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் காவல் துறையினர் பிரவீன் மற்றும் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.