பட்டப் பகலில் நடந்த பயங்கரம்... தங்கைக்காக பழி தீர்த்த சகோதரர்கள்... கொலையின் பின்னணி என்ன.?



26-year-old-youth-murdered-in-day-light-brothers-avenge

கேளம்பாக்கம் அருகே தங்கை கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் விதமாக இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் கொலையாளிகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கேளம்பாக்கத்தை அடுத்த புதுப்பாக்கம்  பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுகன்யா(38) இவரது கணவர் வெங்கடேசன், இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் வெங்கடேசன் மலேசியாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

tamilnaduஇந்நிலையில் புதுப்பாக்கம் பகுதியில் சுகன்யா ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். அப்போது அவரது கடைக்கு அருகே மின் சாதனங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்த பாலாஜி என்ற 26 வயது இளைஞருடன் சுகன்யாவிற்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து கடந்த வருடம்  நவம்பர் மாதம்  சுகன்யா எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாலாஜியின் தந்தையை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

tamilnaduஇந்நிலையில் பாலாஜி நேற்று தனது கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு காரில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் அவரை சராமாறியாக வெட்டியது. அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக பாலாஜி ஓடிய போதும். விடாமல் துரத்தி சென்ற கும்பல் அவரை கொலை செய்து விட்டு தப்பி ஓடியது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையின் தீவிர தேடுதல் வேட்டையில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டனர். கடந்த வருடம் தங்களது தங்கை கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்குவதற்காக சுகன்யாவின் சகோதரர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.