நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்... ஓடி சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி... விடுதியில் இளம் மாணவிக்கு நடந்தது என்ன.?

நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்... ஓடி சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி... விடுதியில் இளம் மாணவிக்கு நடந்தது என்ன.?


25-years-young-girl-died-in-college-hostel

தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன் என்பவரது மகள் மகேஸ்வரி(25). இவர் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி எம் எட் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மகேஸ்வரி நேற்று முன்தினம் விடுதியில் உள்ள மேல் தளத்தில் நின்று கொண்டு வெகு நேரம் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது.

அன்று நள்ளிரவு 11.30 மணி அளவில் மரக்கிளைகள் ஒடிந்து விழுவதை போன்ற சத்தமும், ஒருவர் அலறி துடிப்பதை போன்ற சத்தமும் கேட்டுள்ளது. அதனையடுத்து சக மாணவிகள் ஓடி சென்று பார்த்துள்ளனர். அப்போது மகேஸ்வரி இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கிடந்துள்ளார். உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனையில் மகேஸ்வரியை அனுமதித்துள்ளனர்.

hostel

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் மகேஸ்வரி. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.