தொடர்கதையாகி வரும் தமிழக மீனவர்கள் கைது.! மீண்டும் 21 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.!

தொடர்கதையாகி வரும் தமிழக மீனவர்கள் கைது.! மீண்டும் 21 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.!


21-tamilnadu-fisher-mans-arrested

நேற்று காலை நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளோடு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். இந்தநிலையில், மீனவர்கள் நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது, ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த 21 மீனவர்களையும் கைது செய்தனர் .

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. சமீப காலமாகவே தமிழக மீனவர்களின் படகுகள், வலைகளையும் இலங்கைக் கடற்படையினர்  சேதப்படுத்தப்படுத்தி வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்தநிலையில், மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு மீனவர்களின் மீன்பிடிப் படகுகள் மற்றும் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.