தமிழகம்

சென்னையில் 200க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகி நாசம்! பரபரப்பு வீடியோ காட்சி

Summary:

200 cars fired in chennai

சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை எதிரே உள்ள தனியார் கார் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 200-க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்து நாசமாகின. 

சென்னை போரூரில் உள்ள தனியார் கார் குடோனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கார் குடோனில் உள்ள காலியிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 200க்கும் மேற்பட்ட கார்கள் திடீரென தீ பற்றி எரிந்து வருகிறது. 

கார் குடோனுக்கு அருகில் இருந்த குப்பைக்கிடங்கில் பற்றிய தீ, தொடர்ந்து கார் நிறுத்துமிடத்திற்கு பரவியதாக கூறப்படுகிறது. 

தீ பரவுவதை அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதற்குள் 200க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்து நாசமாகின. ஒருவழியாக நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்துள்ளனர். 

கார் எரிந்த பகுதியில் நீண்ட நேரமாக கரும்புகை மூட்டம் சூழ்ந்திருந்தது. அருகில் சாலையில் சென்றவர்கள் வேடிக்கை பார்த்தபடியே சென்றதால் பயங்கர போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.


Advertisement