தமிழகம்

தனியாக வந்த 21 வயது இளம் பெண்..! பின்னால் வந்த 17 வயது சிறுவன்..! பெண்ணின் வாய்யை பொத்தி...! சென்னையில் நடந்த பயங்கரம்.!

Summary:

17 years old boy tried to abuse 21 years old girl near chennai

17 vவயது சிறுவன் ஒருவன் 21 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எண்ணூரில் பெரியகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பானு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 21 வயதாகும் பானு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் வேலை சென்றுவிட்டு இரவு நேரம் தனியாக வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார் பானு.

அப்போது பின்பக்கமாக வந்த நபர் ஒருவர் பானுவின் வாயை பொத்தி பக்கத்தில் இருந்த ரயில்வே இருப்பு பாதைக்கு இழுத்து சென்றுள்ளார். அங்கு பானுவை பலாத்காரம் செய்ய முயன்றபோது வாயில் இருந்து கையை எடுத்துள்ளார். அப்போது அந்த இளம் பெண் கத்தி கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்துள்ளனர்.

இதனை பார்த்து அந்த நபர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். உடனே இதுகுறித்து எண்ணூர் போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில், எம்ஜிஆர் நகரை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். சம்பவத்தின்போது மது அருந்தி இருந்ததாகவும், அதனால் போதையில் இப்படி செய்துவிட்டதாகவும் அந்த சிறுவன் போலீசாரிடம் கூறியுள்ளான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement