தமிழகம்

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வளர்ப்பு தந்தை உட்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை!..மகிளா கோர்ட் அதிரடி தீர்ப்பு..!

Summary:

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வளர்ப்பு தந்தை உட்பட 2 பேருக்கு ஆயுள் தண்டணை!..மகிளா கோர்ட் அதிரடி தீர்ப்பு..!

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

புதுக்கோட்டையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தை உள்பட இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பார்த்திபன் (34). இவரை 30 வயது பெண் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முதல் கணவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இவர்களை வளர்ப்பு தந்தையான பார்த்திபன் கவனித்து வந்தார்.

இந்த நிலையில் பெண்ணின் முதல் கணவருக்கு பிறந்த 17 வயது சிறுமியை வளர்ப்பு தந்தையான பார்த்திபன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதேபோல் சிறுமியின் தாயின் உறவு பெரியப்பா மகன் ஆகிய வெங்கடேசன் என்பவரும் அந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார்.

இதை அறிந்த சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்தார் மேலும் பார்த்திபனும் வெங்கடேசனும் தனது மகளின் வாழ்க்கையை சீரழித்தது அவருக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனடிப்படையில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பார்த்திபன் வெங்கடேசன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பார்த்திபன், வெங்கடேசன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் தலா 70 ஆயிரம் அபதாரமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ 4 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட ரெண்டுபேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமாக இருந்தபோது டி.என்.ஏ பரிசோதனையில் அந்த கர்பத்திற்கு வெங்கடேசன் தான் காரணம் என தெரியவந்தது. சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்து 6 மாதங்கள் ஆவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


Advertisement