ஆத்தாடி... 144 கிலோ வெள்ளி ஆபரணங்கள், கட்டுக்கட்டாக பணம்... ரயிலில் பரபரப்பு.!

ஆத்தாடி... 144 கிலோ வெள்ளி ஆபரணங்கள், கட்டுக்கட்டாக பணம்... ரயிலில் பரபரப்பு.!


144-kg-silver-seized-in-vellore-raiway-station

ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.05 கோடி மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகள், ரூ. 35 லட்சம் ஆகியவற்றை கைப்பற்றி இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கேரளா மாநிலம் கொல்லம் சென்ற ரயில் காட்பாடி வந்தபோது ரயில்வே போலீஸார் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணமாக பதிலளித்ததால் அவர்கள் கொண்டுவந்த பைகளை போலீஸார் சோதனை செய்துள்ளனர்.

போலீசார் நடத்திய சோதனையில் கட்டிகட்டியாக வெள்ளியும், வெள்ளி ஆபரணங்களும், ரூ.32 லட்சம் ரொக்கமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அந்த நான்கு போரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் கடத்திவந்த வெள்ளிக்கட்டிகள் 144 கிலோ மற்றும் நகைகளின் மதிப்பு ரூ.1.05 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

train

இந்தநிலையில், சேலத்தை சேர்ந்த சதீஷ் குமார், நித்தியானந்தம், பிரகாஷ், சுரேஷ் ஆகிய நான்கு பேரை கைது செய்து தற்போது சென்னை வருமான வருத்துறையினரிடம் ரயில்வே போலீசார் ஒப்படைக்க உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட நான்கு பேரும் நகை வியாபாரிகள் என தெரியவந்துள்ளது.