14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு!,.. குளிர்ச்சியான தகவலை வெளியிட்ட ஆய்வு மையம்..!

14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு!,.. குளிர்ச்சியான தகவலை வெளியிட்ட ஆய்வு மையம்..!


14 districts will get rain fall today an tomorrow

இன்றும், நாளையும் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, தமிழகத்திலும் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில  இடங்களில் வெயிலின் தாக்கம் மிக கொடுமையாக உள்ளது. 

இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் அடுக்கில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வாநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், குமரிக்கடல், மன்னார் வளைகுடா தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மேற்கு திசையில்  இருந்து மணிக்கு 50கிமீ வேகத்தில் வீசும். லட்சத்தீவு, கேரளா, அதை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று  55 கிமீ வேகத்திலும், தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று  50 கிமீ வேகத்திலும்  வீசும். அதனால் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.