"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
15 ஆயிரம் கடன்! 13 வயது சிறுமி!! கடனை திருப்பி செலுத்த முடியாததால் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு!
15 ஆயிரம் கடனை திருப்பி செலுத்த முடியாததால் 13 வயது மகளை இளைஞர் ஒருவருக்கு சிறுமியின் பெற்றோர் திருமணம் செய்துவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டடத்தை சேர்ந்தவர்கள் மூக்கன் - அஞ்சலம் தம்பதியினர். இவர்களது மகன் சரவணகுமார் வயது 25.
இவர்களிடம் இருந்து குளித்தலை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தமபதி ஒருவர் 15 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த இயலாததால், தங்கள் 13 வயது மகளை சரவணகுமாருக்கு திருமணம் செய்துவைப்பதாக சிறுமியின் பெற்றோரும், சரவணகுமாரின் குடும்பமும் முடிவு செய்துள்ளது.
இதற்கு சிறுமி மறுக்கவே, அவரது மறுப்பையும் மீறி வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்னனர். திருணம் முடிந்த சில நாட்களில் இடித்துக்குறித்து குழந்தைகள் நல காப்பகத்திற்கு சிறுமி தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் சரவணகுமாரை கைது செய்துள்னனர்.
மேலும், சரவணகுமாரின் பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோரை குழந்தை திருமணம் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துளனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சிறுமி குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.