தினமும் சோர்வுடன் காணப்பட்ட 13 வயது சிறுமி.! மருத்துவமனை பரிசோதனையின்போது தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!



13-year-child-pregnat-with-mother-illegal-lover

குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவர் கேரளாவில் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சசிகுமாரின் நடத்தை சரியில்லாத நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்தவர் சாந்தா. இவர் தனது கணவர் இறந்த நிலையில் 13 வயது மகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். மேலும் மிகவும் வறுமையில் கஷ்டப்பட்டு வந்த அவர்களுக்கு சசிக்குமார் அடிக்கடி பண உதவி செய்ததன் மூலம் சாந்தாவுடன் நெருங்கி பழகி உள்ளார். 

    13 year child

இந்நிலையில் பள்ளிக்கு சென்று வந்த சாந்தாவின் 13 வயது மகள் அடிக்கடி சோர்வாக இருந்துள்ளார். இந்நிலையில் அவரை சாந்தா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. 

இதனை அறிந்த சாந்தா பெரும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து அவரது மகளிடம்  கேட்ட நிலையில், அடிக்கடி வீட்டிற்கு வரும் சசிகுமார், சாந்தாவிடம் பணத்தை கொடுத்து ஏதாவது வாங்கி வருமாறு அனுப்பிவிட்டு, சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சாந்தா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சசிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..