தமிழகம்

12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு!

Summary:

12'th student exam date announced

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு, நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. 10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியாமல் போனது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 24 ஆம் தேதி நடத்தப்பட்ட 12 ஆம் வகுப்பு இறுதி நாள் தேர்வில் சில மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலித்து 24 அன்று தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் தனியாக வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி அந்த தேர்வை வரும் 27 ஆம் தேதி நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. 

தேர்வெழுதும் மாணவர்களுக்கு அவர்களின் சொந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இதற்கான நுழைவுசீட்டினை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது அவரவர் பள்ளிகளிலோ ஜூலை 13 முதல் ஜூலை 17 வரை பெற்றுக்கொள்ளலாம். 

அதேபோல் தனி தேர்வர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை சம்பந்தப்பட்ட தனித்தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்வதற்காக போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். நோய்கட்டுப்பாட்டு பகுதியில் வசிப்பவர்களுக்கு தேர்வு மையங்களில் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.


Advertisement