அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
கொடுமை! 12ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி அடைந்த அரசு பள்ளிகள் எத்தனை தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்.!
2018 - 19 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19 அன்று வெளியானது. கடந்த மார்ச் மாதம் அனைத்து தேர்வுகளும் முடிவுற்ற நிலையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் வெளியான இந்த பிளஸ் 2 தேர்வு முடிவில் இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் அதிகப்படியான சதவிகிதத்தில் தேர்ச்சி பெற்றனர். இந்த தேர்வு முடிவில் மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுனர்.
மேலும் மாவட்ட ரீதியான தேர்ச்சி விகிதத்தில் 95.37 சதவிகிதம் பெற்று திருப்பூர் முதலிடத்தையும், 95.23 சதவீதம் பெற்று ஈரோடு இரண்டாம் இடத்தையும், 95.15 சதவீதத்துடன் பெரம்பலூர் மூன்றாவது இடத்தையும் பெற்றது.

இந்நிலையில், தற்போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் சில புள்ளிவிபரங்கள் வெளிவந்துள்ளது. அதாவது பொதுத் தேர்வில் கலந்து கொண்ட 2700 அரசு மேல்நிலை பள்ளிகளில் 80 பள்ளிகள் மட்டுமே 100% தேர்ச்சியை பெற்றுள்ளது. அதேவேளையில் 1200 தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு 238 அரசுபள்ளிகள் 100% தேர்ச்சி பெற்ற நிலையில் தற்போது வெறும் 80 பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பது பள்ளிக்கல்வித்துறையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.