மே 3-ம் தேதிக்குப் பிறகு கட்டாயம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு..! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.!

மே 3-ம் தேதிக்குப் பிறகு கட்டாயம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு..! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.!



10th-exam-will-happen-after-may-3rd

மே 3 ஆம் தேதி, ஊரடங்கு நீக்கப்பட்ட பிறகு 10 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக 10 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தற்காலிமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 10 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறுமா, நடைபெறாதா என்ற கேள்வி பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்தது.

10th Exam

இந்நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடைபெறும். தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து மே 3 ஆம் தேதிக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இன்று காலை முதலமைச்சர் தலைமையில், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது.

10 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் இருந்தால் மட்டும்தான், 11 ஆம் வகுப்பில் எந்த பாடத்தை தேர்வு செய்வது என்பது குறித்து முடிவெடுக்க முடியும். அதேநேரம், டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு 10 ஆம் வகுப்பு மதிப்பெண்ணும் முக்கியம் என்பதால் 10ம் வகுப்பு தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என அமைசர் கூறியுள்ளார்.