வெளியானது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்! மாணவிகளை விட மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சி!

10th exam result released


10'th exam result released

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்டது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண் மற்றும் அவர்களின் வருகைப்பதிவேடு ஆகியவற்றை கணக்கில் கொண்டு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்ணை கணக்கிட்டு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தேர்வு முடிவுகள் அவர்களது செல்போன் எண்ணுக்கே  அனுப்பட்டுள்ளது. 

exam

மறுகூட்டல் கிடையாது என்பதால் மதிப்பெண் சார்ந்த குறைகள் இருப்பின் ஆக.17-25 வரை பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் தங்கள் பிறந்த தேதி மற்றும் பதிவு எண்களை இணைய தளத்தில் பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுத் தேர்வை எழுதிய 9,39,829 மாணவ, மாணவிகளில், 4,68070 மாணவிகளும், 4,71,759 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலமாக மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.