BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
Breaking news :கொரோனா எதிரொலி! 10ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ஒத்திவைப்பு..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நோயை குணப்படுத்த இதுவரை எந்த மருந்துகளும் கண்டு பிடிக்கவில்லை.
இதனால் மத்திய, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே 9ஆம் வகுப்பு வரை அனைத்து வகை பள்ளிகளுக்கும் தமிழக அரசு விடுமுறை அறிவித்தது.

இதனிடையே, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 27ஆம் தேதி துவங்க உள்ள நிலையில், அதனை ஒத்திவைக்க வேண்டும் என எம்எல்ஏ தமிமுன் அன்சாரி பேரவையில் இன்று வலியுறுத்தினார்.அதற்கு தற்போது பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 10ஆம் பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.
மேலும் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு இத்தேர்வுகள் நடத்தப்படும் எனக் கூறிய முதல்வர் 9.45 லட்சம் மாணவர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார். ஆனால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் திட்டமிட்டப்படி நடக்கும் என்று அறிவித்துள்ளார்.