மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! இனி 10,+1,+2 மாணவர்களின் பொது தேர்வு எழுத 2.30 மணி நேரம் இல்லை! அமைச்சர் அதிரடி அறிவிப்பு.

10,11,12 exam timing


10,11,12 exam timing

பள்ளிக்கல்வி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் பொது தேர்வு நேரமான 2.30 மணி நேரமாக இருந்தது. ஆனால் தற்போது புதிய பாடத்திட்டங்களும், மாணவர்கள் சிந்தித்து செயல்படும் வகையிலும் வினாக்கள் கேட்கப்படுவதாலும் தேர்வு நேரத்தை 3 மணி நேரமாக உயர்த்தியுள்ளதாக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன் வரும் வரும் ஏப்ரல் மற்றும் மே 2020 ஆண்டுக்கான பொது தேர்வு எழுதும் 10,11,12 வகுப்பு மாணவர்களின் தேர்வுக்கான அட்டவணையை தற்போது பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 10 வகுப்பு பொது தேர்வு மார்ச் 17 தொடங்கி ஏப்ரல் 9 வரை நடைபெறுகிறது.

Senkodaiyan

அதன்பிறகு 11ஆம் வகுப்பு பொது தேர்வானது மார்ச் 4 முதல் மார்ச் 26ஆம் தேதி வரை நடைப்பெறுகிறது. அதைப்போல் பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 2, 5களில் மொழி பாடங்களும் அதனை தொடர்ந்து மற்ற பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.