பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
காரில் கடத்திவரப்பட்ட ரூ.10 கோடி பறிமுதல்: சட்டவிரோத அமைப்பினருக்கு தொடர்பா?!,, தொடரும் விசாரணை..!
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா காவல்துறையினர் தேசிய நெடுஞ்சலையில் நேற்று இரவு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். பள்ளிகொண்டா அருகேயுள்ள சின்ன கோவிந்தம்பாடி பகுதியில் சாலையை விட்டு சற்று தள்ளி ஒதுக்குப்புறமான இடத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு லாரி மற்றும் கார் நிற்பதையும் அங்கு சிலர் காரில் இருந்து லாரிக்கு எதையோ மாற்றுவதையும் கண்டனர்.
இதனைத்தொடர்ந்து, விரைந்து சென்ற காவல்துறையினர், அவர்களை சுற்றி வளைத்து கார் மற்றும் லாரியில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 48 கட்டுகளாக கட்டப்பட்டிருந்த ரூ. 10 கோடி பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னையில் இருந்து கார் மூலம் கொண்டுவரப்பட்ட பணத்தை லாரிக்கு மாற்றிக்கொண்டிருந்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 4 பேரில் 2 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், ஒருவர் மதுரையை சேர்ந்தவர் என்பதும் லாரி டிரைவர் கேரளாவை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சென்னையில் இருந்து கடத்திக்கொண்டுவரப்பட்ட ரூ.10 கோடி யாருக்கு சொந்தமானது? கேரளாவில் யாரிடம் கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டது? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.