பரபரப்பான தேர்தல் நேரத்தில் வைக்கோல்போருக்குள் இருந்த 1 கோடி.. விடிய விடிய சோதனை செய்து கைப்பற்றிய அதிகாரிகள்..1 crore money found in Vaikol por near Trichy

பரபரப்பான தேர்தல் நேரத்தில் மணப்பாறை அ.தி.மு.க வேட்பாளர் ஆர். சந்திரசேகர் அவர்களின் ஜேசிபி ஓட்டுனரின் வீட்டில் இருந்து வருமானவரித்துறையினர் 1 கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றியுள்ளனர்.

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தேர்தலை ஒட்டி வருமானவரிதுரனையினர் பல இடங்களில் சோதனை நடத்திவருகின்றனர். இந்நிலையியல் திருச்சி மணப்பாறை அ.தி.மு.க வேட்பாளரும், எம்எல்ஏவுமான ஆர்.சந்திரசேகர் அவர்களின் நிறுவனத்தில் ஜேசிபி ஓட்டுநர்களாக பணிபுரிந்துவரும் வலசுப்பட்டியை சேர்ந்த அழகர்சாமி மற்றும் கோட்டைப்பட்டியை சேர்ந்த ஆனந்த் என்ற முருகானந்தம் ஆகியோர் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.

அதேபோல் மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ நிதியில் நடைபெறும் பணிகளை எடுத்துசெய்யும் ஒப்பந்ததாரர் தங்கபாண்டியன் அவர்களின் வீட்டிலும், எம்.எல்,ஏ வுக்கு சொந்தக்காரர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர்.

நள்ளிரவில் நடந்த இந்த சோதனையில் மூன்று இடங்களில் பணம் ஏதும் கிடைக்காதநிலையில், வலசுப்பட்டியை சேர்ந்த அழகர்சாமி வீட்டிற்கு நள்ளிரவில் சென்ற அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை செய்துள்ளனர்.

இதில் அழகர்சாமியின் வீட்டில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் இருந்த வைக்கோல் போர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. உடனே வைக்கோல் போரை பிரித்து ஆய்வு செய்ததில், வைக்கோல் போருக்குள் 500 ரூபாய் கட்டுகளாக சுமார் 1 கோடி ரூபாய் பணம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பின்னர் பணம் முழுவதையும் கைப்பற்றிய அதிகாரிகள், பணம் தொடர்பாக அழகர்சாமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.