அடி ஆத்தீ... நாயுடன் குளியலறைக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை! பார்த்து பதறிய வீட்டு உரிமையாளர்..... நெஞ்சை நடுங்கவைக்கும் வீடியோ!!!



uttarakhand-leopard-enters-house-bathroom-rescued-dog

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாகில் உள்ள ஒரு வீட்டின் குளியலறைக்குள் சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாய் ஒன்றைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை, குளியலறையில் பதுங்கியிருந்தது. அப்போது அங்கு சென்ற வீட்டு உரிமையாளர் சிறுத்தையை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இருப்பினும், உடனடியாகச் செயல்பட்டு கதவைப் பூட்டியதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

நாயுடன் குளியலறைக்குள் புகுந்த சிறுத்தை

ருத்ரபிரயாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் நாய் ஒன்றைத் தூக்கிக்கொண்டு சிறுத்தை புகுந்துள்ளது. பின்னர் அந்த நாயுடன் குளியலறைக்குள் சென்றது. இதை அறியாமல் வழக்கம்போல் குளியலறைக்குச் சென்ற வீட்டு உரிமையாளர், உள்ளே சிறுத்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.

இதையும் படிங்க: நொடியில் 26 பேர் உயிரையும் காவு வாங்கிட்டே..! அக்காவை பார்க்க ஆசையாக போன தங்கைகளும் துடிதுடித்து பலி..! ஒரே குடும்பத்திலே 3 பேர்... கதறும் குடும்பத்தினர்..!!!

சிறுத்தையிடமிருந்து தப்பிக்க நாய் போராடிக் கொண்டிருந்த நிலையில், வீட்டு உரிமையாளர் பதற்றமடையாமல் செயல்பட்டார். சிறுத்தை வெளியே வந்துவிடாதபடி குளியலறைக் கதவை வெளிப்புறமாகப் பூட்டினார்.

வனத்துறையினர் விரைந்து வந்து நாயை மீட்டனர்

இதையடுத்து உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறைக் குழுவினர், மிகுந்த எச்சரிக்கையுடன் குளியலறைக்குள் இருந்த சிறுத்தையை அணுகினர். பின்னர் அதனிடமிருந்து நாயைப் பத்திரமாக மீட்டனர்.

வீட்டு உரிமையாளரின் சமயோசித நடவடிக்கையால் சிறுத்தை வீட்டின் மற்ற பகுதிகளுக்குள் நுழைவதும், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுவதும் தடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

இதையும் படிங்க: அடிஆத்தி...! மழை போல் பொழிந்த தீப்பொறி... கிங் ரெஸ்டாரண்ட் சமையலறை குழாயில் நேர்ந்த விபரீதம்! 6 வது மாடி ஹோட்டல் வரை படபடவென பரவியது..! ஷாக் வீடியோ...!!!