கோவிலில் தேங்காய்.. எப்படி உடைத்தால் என்ன பலன்.?!

இந்து கோவில்களில் அர்ச்சனைக்கு தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு கொடுக்கப்படும் தேங்காய் கடவுள் முன்பாக உடைக்கப்படும். அப்படி உடைக்கப்படும் தேங்காய் எந்த மாதிரி உடைந்தால் நமக்கு நன்மை அல்லது தீமை ஏற்படும் என்பது குறித்து பார்க்கலாம்.
தேங்காய் இரண்டு சம பாதியாக உடையும் பட்சத்தில் நம்முடைய வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அடிப்பகுதியானது பெரியதாக உடைந்தால் வேண்டுதல் சற்று தாமதமாக நிறைவேறுமாம்.
தேங்காய் ஒரு வேளை அழுகி இருந்தால் அது கண் திருஷ்டியை விலக்கும். தேங்காயில் சின்னதாக பூ ஏற்பட்டு இருந்தால் நல்ல செய்தி தேடி வரும். தேங்காயில் பூ மிகவும் பெரிதாக வைத்திருந்தால் பண வரவும் அதிர்ஷ்டமும் நமக்கு அதிகரிக்கும்.
தேங்காய் கொப்பரையாக இருந்தால் தேவையற்ற வழக்குகள் சண்டை, சச்சரவுகள் ஏற்படலாம். தேங்காய் குறுக்காக உடைந்தால் குடும்பத்தில் கவலையும், துன்பமும் அதிகரிக்கும்.