300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்! மூன்று முக்கிய கிரகங்களும் இணைந்து அதிர்ஷ்டம் பெறவுள்ள ராசியினர் இவர்களே!



rare-astrological-yogas-after-300-years

300 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் அதிர்ஷ்டகரமான யோகங்கள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில குறிப்பிட்ட கிரகங்களின் சேர்க்கையால் அரிய யோகங்கள் உருவாகும் நிகழ்வுகள் நிகழ்கின்றன. அதுபோல், தற்போது 300 ஆண்டுகளுக்குப் பிறகு சனி, புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று முக்கிய கிரகங்களும் ஒன்றாக இணைகின்றன.

இந்த கிரகங்களின் இணைவு மூலமாக திரிகிரஹி யோகம், பத்ர யோகம் மற்றும் மாலவ்ய ராஜ யோகம் உருவாக இருக்கின்றன. இந்த யோகங்கள் சில ராசிகளுக்குத் விதியை மாற்றும் அதிர்ஷ்டத்தை வழங்கவுள்ளதாக ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

300 ஆண்டுகள் ஜோதிடம்

எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த யோகங்களால் பெரும் நிதி லாபங்களை அனுபவிப்பார்கள். புதன், சுக்கிரன், சனியின் இணைவு இவர்களுக்கு பண வரவுகளையும், வேலைவாய்ப்புகளையும் வழங்கும். பதவி உயர்வு, வெளிநாட்டு முதலீடுகள், பயணங்களின் மூலம் லாபம் என பல நன்மைகள் காத்திருக்கின்றன.

இதையும் படிங்க: ராஜயோகம் பெறப்போகும் நான்கு ராசிக்காரர்கள்! இன்றைய ராசிபலன்கள்...

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் தனயோகம் மற்றும் குடும்பச் சந்தோஷம் போன்ற பலன்களை அனுபவிப்பார்கள். எந்த முயற்சியும் வெற்றி பெறும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். கிரக யோகங்களால் வாழ்க்கையில் முன்னேற்றம் தெளிவாக தெரியும்.

மகரம்

மகர ராசியினருக்கு இந்த மூன்று யோகங்களும் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை ஏற்படுத்தும். செல்வம், மகிழ்ச்சி, மற்றும் வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது. வெளிநாட்டுப் பயணங்கள் வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு நிச்சயம். பத்ரா, திரிகிரஹி மற்றும் மாலவ்ய யோகங்கள் இவர்களுக்கு வாழ்வில் நிதி மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

இந்த பதிவில் இடம்பெற்றுள்ள அனைத்து தகவல்களும் ஜோதிடக் கணிப்புகள், ஆன்மீக நூல்கள் மற்றும் பஞ்சாங்கங்களின் அடிப்படையில் பெறப்பட்டவை. வாசகர்கள் தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் இதைப் பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க: 2025 இல் மக்களை பதற்றத்திற்கு உள்ளாக்கும் அபாயங்கள்! பாபா வங்காவின் கணிப்புக்கள் ஜூலை மாதத்தில் பலித்தன! இன்னும் நடக்க போவது என்னென்ன?