புரட்டாசி மாதத்தில் பிறந்தவரா நீங்கள்? உங்கள் கேரக்டர் எப்படி இருக்கும் தெரியுமா?
புரட்டாசி மாதம்
தமிழ் மாதத்தில் உள்ள ஒவ்வொரு மாதத்திற்கும் தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் பெருமாளுக்கு ஏற்ற தமிழ் மாதமான புரட்டாசி இந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. எனவே புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குண நலன்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.
பொதுவாக புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் வீட்டிற்கு பெரும் தொல்லையாக அமைவார்கள் என்று பெரியவர்கள் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அது உண்மையில்லை. புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் திறமைசாலிகளாக விளங்க கூடியவர்கள். குறிப்பாக அவர்கள் எடுக்கும் சிறிய முயற்சியில் கூட பல பெரிய காரியங்களை செய்து முடிப்பவர்கள்.
புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குண நலன்கள்
புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வார்கள். யாருக்காவது வாக்கு கொடுத்தால் அதை கட்டாயம் காப்பாற்றுவார்கள். எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அதனை கடைசி வரை கைவிட மாட்டார்கள். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் நேர்மையானவர்களாக இருப்பதால் அவர்களுக்கு எதிரிகள் அதிகமாக இருக்க வாய்ப்புண்டு.
புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன், சனி மற்றும் செவ்வாய் பக்க பலமாக இருப்பதால், இவர்கள் பல பதவிகளில் தலைமை பதவி வகிப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் புத்திசாலிகளாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் இருக்காது.
புரட்டாசியில் பிறந்தவர்களுக்கு ஏற்படும் நோய்கள்
புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கு நரம்பு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக அதிக கோபம் உடையவர்களாக இருப்பதால், இவர்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும். மேலும் சிலருக்கு கண் சம்பந்தப்பட்ட நோய்களும் ஏற்படும்.