பிணவறையில் திடீரென கண் விழித்து எழுந்த நபர்! அடேய்.. முதல்ல ஒரு சிகரெட்டும் லைட்டரும் கொடுங்க... உறைந்து போன ஊழியர்கள்! ஷாக் வீடியோ...!!!
நைஜீரியாவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துவிட்டதாகக் கருதப்பட்ட நபர், பிணவறையில் திடீரென கண் விழித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்துவிட்டதாக நினைத்து பிரேதப் பரிசோதனை கூடத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு உயிருடன் எழுந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
பிணவறையில் திடீரென கண் விழித்த நபர்
நைஜீரியாவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகக் கருதி, அவரை பிணவறைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறிது நேரத்துக்குப் பிறகு அவர் திடீரென கண் விழித்து எழுந்துள்ளார்.
இதையும் படிங்க: அதுக்கு கோவம் வந்துச்சு... அவ்வளவுதான்! காட்டு ராஜாவையே பைக்ல போய் மறிச்ச வனத்துறை ஊழியர்கள்..! பகீர் பின்னணி காரணம்.... திக் திக் வீடியோ!!!
அந்தக் காட்சிகளில், அவரது உடலில் இறந்தவர்களுக்குப் பூசப்படும் வெள்ளைப் பொடி தடவப்பட்டிருப்பது தெரிகிறது. கண் விழித்த அவர், தனக்கு சிகரெட்டும் லைட்டரும் வேண்டும் என்று கேட்டுள்ளது.. அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.
மகிழ்ச்சியில் பலகாரம் வழங்கிய மக்கள்
அந்த நபர் உயிருடன் இருப்பது தெரியவந்ததும் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அவர் உயிர் பிழைத்ததைக் கொண்டாடும் வகையில் சிலர் பொதுமக்களுக்குப் பலகாரங்களை வழங்கியுள்ளனர் . அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பே அவர் உயிருடன் திரும்பியதாகக் கூறி பலரும் நிம்மதி தெரிவித்தனர்.
இந்த வீடியோவைப் பார்த்த பலர் இதை அதிசயம் எனக் கூறி பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில், போதிய மருத்துவ வசதிகள் இல்லாத சூழலில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகத் தவறாகக் கருதப்படுவது ஆபத்தானது என்றும் சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், அந்த நபர் மருத்துவர்களால் அதிகாரப்பூர்வமாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாரா, விபத்துக்குப் பிறகு அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்கள் இதுவரை தெரியவில்லை.
Shocking video of man declared dead after a road accident waking up inside a mortuary, leaving people in total shock. https://t.co/xbVs4vpZ7N
— Nigeria Stories (@NigeriaStories) November 14, 2026
இதையும் படிங்க: ரோட்டில் நடந்து வந்த பெண்ணுக்கு பறந்து வந்த எமன்! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சி..!!!